வாக்குக்கு பணம் பெறுவது கேவலம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளில் தயாராக உள்ள தமது படம் குறித்து, கமல் செய்தியாளர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். அப்போது தேர்தல் நேரம் நெருங்குவதால் வக்காளர்க்ளளுக்கு என்ன அறிவுறுத்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது பேசிய கமல்ஹாசன் வாக்குக்கு பணம் பெறுவது கேவலம் என்று கூறினார்.ஒரு தடவை உங்களது வாக்கை விற்றால் விற்றதுதான் என்றும், திரும்ப நீங்கள் எதுவும் கேட்க முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.
மேலும், உங்கள் வாக்கை விற்று நீங்கள் திருட்டுத் தனம் செய்தால், அவனும் திருட்டுத் தனம்தான் செய்வான், அவன் எப்படி உங்களுக்கு நல்லது செய்ய வருவான் என்றும் கேள்வி கேட்டுள்ள கமல்ஹாசன், வாக்குகளை விற்பது என்பது மிகவும் கேவலம், உங்களது கடமையை சரியாகச் செய்துவிட்டு, பின்னர் நீங்கள் கேள்வி கேளுங்கள் என்று வாக்களர்களுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.
Friday, April 29, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment