Monday, April 25, 2016

சமீபத்தில் நாம் பலரும் அறிந்த செய்திகளில் ஒன்று , வன்னியில் ஒரு இளம் பெண்ணை வீடு புகுந்து யாரோ கெடுத்துவிட்டு கொலை செய்துவிட்டார்கள் என்று. இப்படி தான் இச்செய்தியும் வெளியாகி இருந்தது. கொலை நடைபெற்ற இடத்தில் அழுதுகொண்டு நின்ற தாயார். தான் இல்லாத வேளையில் வீட்டுக்குள் புகுந்த சிலர் மகளை கெடுத்து கொலைசெய்து விட்டார்கள் என்று பிழையான தகவலை கூறி அனைத்து மீடியாக்களின் காதிலும் பூ சுத்திவிட்டார். ஆனால் எத்தனை நாட்களுக்கு தான் உண்மை மறைந்திருக்கும்? இதுபோல போலியான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள். இதனை படித்துவிட்டு பரிதாபப்பட்ட நெஞ்சங்களுக்கு உண்மை புரியவேண்டும்.

இப்படி சில தாய் மார்கள் சொல்ல , வெளி நாட்டில் உள்ள செயல்பாட்டாளர்கள் இலங்கையில் கற்பழிப்புகள் அதிகரித்துவிட்டது என்று புள்ளிவிபரங்களை திரட்டிக் கொடுக்க. இறுதியில் பார்த்தால் அது பொய்யான தகவல் என்று அரசு, ஆதாராத்தோடு மேசையில் போட ... பெரும் பின் விளைவுகளை எமது சமுதாயம் தான் தாங்கி நிற்கிறது... சரி இழுத்துகொண்டு போகாமல் உண்மையை தெரியப்படுத்துவோம்...

கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், தனது மகளோடு வாழ்ந்து வந்த தாய் ஒருவரோடு உறவில் இருந்துள்ளார். இன் நபர் ஒரு அடாவடி ரவுடி. சமீபத்தில் கணவர் ஸ்பான்சர் செய்ய வெளிநாடு செல்ல மனைவி ஆயத்தமாகியுள்ளார். இதனை அறிந்த கள்ளக்காதலன்(ரவுடி) யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுளைந்து அவரது பாஸ்போட்டை திருடிச் செல்ல முற்பட்டுள்ளாராம். அப்படி என்றால் தன் கள்ளக் காதலி மேலும் கொஞ்ச நாள் வன்னியில் இருப்பார் அல்லவா. ஆனால் அவர் அன்று குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்குள் நுளைந்தவேளை, அங்கே அவரது பெண் பிள்ளை இருந்துள்ளார். தன்னை அடையாளம் கண்ட அந்த பெண் பிள்ளையை தான் கள்ளக் காதலன் கொலைசெய்து இருக்கிறான். இது தான் நடந்த உண்மை என்கிறார்கள் விடையம் அறிந்தவர்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer