Saturday, April 30, 2016

விரைவில் வெளிவர இருக்கிறது சூர்யா நடித்திருக்கும் ‘24’. விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது இப்படம்.

திரைப்படத்தில் நடிப்பதைத் தவிர தனது ‘அகரம் நிறுவனம்’ மூலம் சமூக நல விஷயங்களையும் செய்து வருகிறவர் சூர்யா. அதே நேரத்தில் அவருக்கான ரசிகர் மன்றங்களும் இருந்துவருகிறது. ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கும் சூர்யா சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மோதலில் ஈடுபடுவதைக் குறித்து ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

சில நேரங்களில் ரசிகர்களை நினைத்து வருந்தியிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24மணி நேரம் மட்டுமே. நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும். 25 வயதை எட்டுவதற்கு முன்னர் ஒவ்வொருவரும் தனக்கான இலக்கை வகுத்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள். இந்த உலகில் ஏராளமான வாய்ப்புகள்
கொட்டிக்கிடக்கின்றன. எனவே ரசிகர் மோதல் போக்கைக் கைவிட வேண்டும். இழந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது. எனது அறிவுரையை எத்தனைப்பேர் மனதில் நிறுத்திக்கொள்வீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

என் ரசிகர்கள் என்பதைத் தாண்டியும் உங்களுக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. அதை நீங்கள் தான் பேண வேண்டும். ரசிகராக முழு நேரத்தையும் வீணாக்காமல் அந்தப் பொன்னான நேரத்தை அக்கபூர்வமாகச் செலவழியுங்கள்.

மேலும் அவர், என் மனைவி ஜோதிகா, அஜித் மனைவி ஷாலினி, விஜய் மனைவி சங்கீதா எப்போதும் நட்புடன் பழகிவருகிறார்கள். விஜய்யின் 40-வது பிறந்தநாளையொட்டி நாங்கள் சந்தித்துக்கொண்டோம் என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer