தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் கலையரசன் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்தே கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் என்கிற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தளபதியாக இருந்து அரச படைகளிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற ராம் என்பவரையும் சில தினங்களுக்கு முன்னர் அம்பாறையில் வைத்து பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Home
»
Sri Lanka
»
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் போராளி கலையரசனும் கைது!
Wednesday, April 27, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment