Tuesday, April 26, 2016

தயாரிப்பாளர் தாணுவுக்கும், செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட வியாபார  விகிதாச்சார விவகாரம் காரணமாக அந்த ஏரியாவில் விஜய்யின் தெறி ரிலீஸ் ஆகவில்லை.

கிட்டதட்ட ஆறு கோடியாவது தாணுவுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்கிறார்கள். அதென்னவோ தெரியவில்லை. விஜய் படமே வந்தாலும் சங்க கட்டுப்பாட்டுக்கு தலை வணங்குகிறோம் என்று குறுக்கு சால் ஓட்டவில்லை தியேட்டர் காரர்கள்.

இதில் ஒரு சிலர் மட்டும் உங்களால ஆனதை பார்த்துக்கங்க என்று கட்டுக் கோப்பை குலைத்து படத்தை திரையிட்டார்கள். திரையரங்க உரிமையாளர்களின் இந்த ஒற்றுமை நீடித்தால் ஒருவரும் படம் எடுத்து திரைக்கு கொண்டு வர முடியாது என்று அஞ்சுகிறார்களாம் தயாரிப்பாளர்கள் தரப்பில்.

இதே நிலைமை மற்ற ஏரியாவுக்கும் தொடர்ந்தால் என்னாவது என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாம். நாங்க மெட்டீரியல் கொடுத்தால்தானே நீ படம் ஓட்டுவே? என்று இவர்களும், நான் தியேட்டர் கொடுத்தால்தானே நீங்க படம் காட்டுவீங்க என்று அவர்களும் மோதிக் கொள்ள, ஏதோவொரு பெரும் சேதத்திற்கு தயாராகி வருகிறது சினிமா இன்டஸ்ட்ரி.

0 comments :

Post a Comment

 
Toggle Footer