Monday, April 25, 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட்டு முன்னோக்கிக் கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எத்தகைய தடைகள், கஷ்டங்கள் வந்தபோதும் அவற்றைத் தாங்கிக்கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒரு பலமான கட்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பலாங்கொடையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற அம்பலாங்கொடைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்தை தான் பலவந்தமாகவன்றி எல்லோருடையவும் விருப்பத்துடனேயே பெற்றுக்கொண்டதாகவும், கட்சியில் சீர்திருத்தங்களைச் செய்து அதனை முன்கொண்டுசெல்கையில் பல்வேறு தடைகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer