Tuesday, April 26, 2016

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான தீர்வின் அவசியம் தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரமுக்கு (Margot Wallstrom) விளக்கமளித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர், யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார். இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சரையும் சந்தித்திருந்தார். இதன்போதே, மேற்கண்ட விடயத்தை தான் எடுத்துக் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டைப் பிரிக்காது ஒருமித்து வைத்திருக்க நாம் சமஷ்டியை கோரும் போது, சமஷ்டி என்றால் பிரிவினை என சிலர் கூறுவதால் எமக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இங்கு, வெளிநாட்டு அரசுகளின் பங்கு அல்லது தலையீடு இல்லாவிடில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற முறையில் எமது பாதிப்பு இன்னும் கூடிக் கொண்டே போகும்” என்றும் தான் கூறியுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer