Wednesday, April 27, 2016

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பந்துவீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த லீக் ஆட்டத்தில் புனே அணி ’டாக்வொர்த்-லீவிஸ்’ விதிப்படி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய பிறகு தற்போது 6வதுஆட்டத்தில் புனே அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றி குறித்து அந்த அணியின் தலைவர் டோனி கூறுகையில், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மழை நாங்கள் எதிர்பாராத ஒன்று.ஆனால் மழையால் நாங்கள் வெற்றி பெறவில்லை.

ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்ததால் முதலில் பந்துவீசவே முடிவு செய்து இருந்தோம். எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள்.

அனைத்து பந்து வீச்சாளர்களும் நேர்த்தியுடன் வீசினார்கள். அஸ்வின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களது களத்தடுப்பும் நன்றாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், இன்னும் 10 வருடத்திற்கு கிரிக்கெட் விளையாட விரும்புகிறீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த டோனி, 10 வருடங்கள் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை. ஆனால் 5 வருடங்கள் ஆடினாலே சிறப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer