Monday, March 28, 2016

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் கருத்தை தவிடு பொடியாக்கியுள்ளார் விராட் கோஹ்லி.

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்காக இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின.

இந்தப் போட்டிக்கு முன்னதாக கோஹ்லி அளித்த பேட்டியில் "கடினமாக சூழ்நிலைகள் தனது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறது.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் என்னை குறிவைத்தால் அது அவர்களுக்கு எதிராக தான் முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோஹ்லியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் டுவிட்டரில் அவரை கிண்டலடிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “உலகக்கிண்ணத் தொடரின் முக்கியமான காலிறுதி ஆட்டத்தில் சொற்ப ஓட்டங்களில் (விராட் கோஹ்லி) ஆட்டமிழந்ததை ரசித்தேன்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் விராட் கோஹ்லி சொல்லியது போல் அவுஸ்திரேலிய பந்துவீச்சை புரட்டியெடுத்து அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றார்.

ஆனால் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து அசந்து போன மிட்செல் ஜான்சன் அப்படியே அந்தர் ’பல்டி’ அடித்து கோஹ்லியை பாராட்டியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer