Thursday, March 31, 2016

சென்னையில் சாலையோர வசித்துவந்தவர்களின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி காவல் நிலையம் அருகே,சாலையோரத்தில் வசித்து வருபவர்கள் விமல்–நேத்தா தம்பதி.

இவர்களின் 8 மாத ஆண் குழந்தை ரோகேஷ், கடந்த 21ம் திகதி சாலையோரத்தில் துாங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை 4 மணிக்கு மேல் திடீரென காணவில்லை.

இது தொடர்பாக, சட்டக்கல்லூரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குழந்தை ரோகேஷ் காணாமல் போன அன்று அந்தப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தனியார் சிசிடிவி காட்சிகள் மூலம் குழந்தையை கடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த காட்சிகளை வெளியிட்டுள்ள காவல்துறை, படத்தில் காணப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் சட்டக்கல்லுாரி காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer