Thursday, March 31, 2016

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்த டோனியிடம் திட்டம் இருப்பதாக முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா கூறுகையில், ”கிறிஸ் கெய்லின் அதிரடியை தடுத்து நிறுத்த இந்திய அணியிடம் போதுமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

இந்திய அணித்தலைவர் டோனி இதற்கான திட்டத்தை ஏற்கனவே வகுத்திருப்பார். கெய்ல் இடது கை பந்துவீச்சாளரிடம் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா ஆரம்பம் முதல் நன்றாக பந்துவீசி வருகிறார். ஜாஸ்பிரீட் பும்ரா நல்ல வேகத்துடனே பந்துவீசி வருகிறார். வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சு பாணி துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும்.

மேலும், கெய்லின் அதிரடியை கட்டுப்படுத்த டோனி முதல் ஓவரிலே அஸ்வினை பயன்படுத்துவார் என நினைக்கிறேன்“ என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer