Thursday, March 31, 2016

அமிதாப்பை அடுத்த குடியரசுத் தலைவராக்க மோடி விருப்பம் கொண்டுள்ளார் என்று, அமிதாப்பின் நெருங்கிய நண்பர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிரபல நடிகர் அமிதாப் பச்சனை தாம் அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததை நினைவு கூர்ந்துள்ளார் அமர் சிங்..அன்று முதல் அமிதாப் பச்சனை மோடிக்கு மிகவும் பிடித்துப் போனது என்றும், அதனால்தான் மாநில அரசின் விளம்பர தூதராக அமிதாப்பை மோடி நியமித்தார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அமிதாம் ஒரு சிறந்த மனிதர் என்பதால், அவர் மீது அதிக அன்பு செலுத்தும் நரேந்திர மோடிக்கு, அடுத்த குடியரசுத் தலைவராக அமிதாப்பை நிறுத்தும் விருப்பம் இருக்கலாம் என்று தாம் கருத்துவதாக அமர்சிங் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவைச் சேர்ந்த சத்ருஹன் சின்ஹா அமிதாப் பச்சனை அடுத்த குடியரசுத் தலைவராக நிறுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer