Thursday, March 31, 2016

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வாகனம் தே.மு.தி.க அலுவலகத்தில் பராமரிப்பில்லாமல் கிடப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் எம்.ஜி.ஆர். அரசியலில் நுழைந்தபோது நனது நீல நிற வேனிலேயே பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் இறந்தபோது அவரது மனைவி ஜானகி அந்த வேனை பராமரித்து வந்தார்.

இந்நிலையில் அரசியலில் குதித்த போது, ஜானகியை நேரில் சந்தித்த விஜயகாந்த் எம்ஜிஆரின் நீல நிற பிரசார வேனை கேட்டுப் பெற்றார்.

ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்ட பல தலைவர்கள் கேட்டும் வேனை கொடுக்காத ஜானகி ஏனோ வீஜயகாந்துக்குக் கொடுக்க முன்வந்தார்.

விஜயகாந்தும், ஆரம்பத்தில் அதனை கோயில் போல வைத்துக் கொண்டாடினார். தனது கட்சியின் தொடக்க விழாவில் கூட இந்த வேனில் வந்துதான் கலந்துகொண்டார்.

எம்எல்ஏ பதவிக்கு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட போது கூட அதில் தான் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போதெல்லாம் அந்த வேன் பற்றி அவர் பெருமையாகவும் பேசிக் கொள்வார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, மக்களவையில் பாஜகவுடன் கூட்டணி என படிப்படியாக முன்னேறிய நிலையில், அந்த பிரசார வேனின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது.

முதலில் வீட்டில் வைத்திருந்த அந்த வேனை பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிறுத்தினார். நாளாடைவில் அந்த வேனை யாரும் பராமரிப்பது இல்லை என கூறப்படுகிறது.

அந்த வேனை உடனடியாக பராமரித்து மீண்டு பழைய பொலிவுடன் இருக்க செய்ய வேண்டும் என்பதே எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆதங்கமாக உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer