Thursday, March 31, 2016

அதிமுகவில் இணைந்திருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் தங்களுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பதுடன் சீட் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளனர்.

அதிமுக-வில் சீட் கேட்டு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர், இதில் நடிகர் வையாபுரி, ஆனந்தராஜ் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி போன்றோரும் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.

இத்தனை ஆண்டு காலமும் பிரசாரம் மட்டும் செய்து வந்த செந்தில், இம்முறை விருகம்பாக்கம் மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகளில் விருப்ப மனு அளித்துள்ளார்.

அமைச்சர் வளர்மதியின் தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் கேட்டு செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு மனு கொடுத்துள்ளார். ஆனால் அந்த தொகுதியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று சிட்டிங் எம்.எல்.ஏவும் அமைச்சருமான வளர்மதி நம்பிக்கொண்டிருக்கின்றார்.

மயிலாப்பூர் தொகுதியில் சீட் கேட்டு பாடகி அனிதா குப்புசாமி மனு அளித்துள்ளார், இதேபோன்று கொளத்தூர் தொகுதியில் சீட் கேட்டு மனு செய்துள்ள நடிகர் ஜே.கே ரித்தீஷ் தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இதற்கு முன்பு அதிமுக-வில் இருந்த எஸ்.வி.சேகர் மற்றும் ராதாரவி உள்ளிட்ட நடிகர்களுக்கு எம்.எல்.ஏவாக வாய்ப்பு கொடுத்து சட்டசபைக்கு அனுப்பியுள்ளதால், பலரும் தங்களுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்துக்கிடக்கின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer