Thursday, March 31, 2016

திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது முதல் இலக்கு என பாஜக வேட்பாளரான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் பாஜக வேட்பாளராக ஸ்ரீசாந்த் களமிறக்கப்பட்டுள்ளார், இதுதொடர்பாக அவர் கூறியதாவது, நான் கிரிக்கெட்டில் எந்த தவறும் செய்யவில்லை, நிரபராதி.

எனவே தான் நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது, இதனால் என்னுடைய இமேஜ் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை.

என்னை கௌரவிக்கும் வகையில் தலைநகரில் நான் போட்டியிட பாஜக இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது, மக்களின் மனதில் இடம்பெறும் வகையில் பணிகளை நான் செய்வேன்.

என்னை எதிர்த்து நிற்கும் நபர்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசக்கூடும், ஆனால் திருவனந்தபுர மக்கள் நன்கு படித்தவர்கள், அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த தொகுதியில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது முதல் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை சந்தித்த போது கிரிக்கெட் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்ட போதும், பயந்து ஓடாமல் தைரியமாக சந்தித்தற்காக தன்னை பாராட்டியதாகவும், மக்களுக்கு பணியாற்றும்படி உற்சாகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer