Monday, March 28, 2016

தனது காதலி அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் விடாமல் கேலி செய்து வருபவர்களை கடுமையாக கண்டித்துள்ளார் விராட் கோஹ்லி.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

கடந்த 50 ஓவர் உலகக்கிண்ண தொடரின் போது கோஹ்லியுடனே அனுஷ்கா சர்மா ஊர்சுற்றி சர்ச்சைக்குள்ளானார்.

அதற்கேற்றார் போல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை தவிர மற்றப் போட்டிகளில் கோஹ்லி சரியாக ஆடவில்லை. இதற்காக ரசிகர்கள் அனுஷ்காவை கடுமையாக சாடினர்.

சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்கள் பிரிந்துவிட்டனர். இருப்பினும் அனுஷ்கா சர்மா கோஹ்லிக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் கோஹ்லி தனியாளாக நிலைத்து நின்று இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

ஆனால் தற்போது ரசிகர்கள் அனுஷ்காவை வேறுவிதமாக கலாய்க்க தொடங்கியுள்ளனர். ”அனுஷ்கா, எங்கள் கோஹ்லியை மீண்டும் திருப்பி தந்ததற்காக நன்றி” என்பது போன்று மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகின்றனர்.

இதனையறிந்த கோஹ்லி டுவிட்டரிலும், இண்ஸ்டாகிராமிலும் அனுஷ்காவை கேலி செய்பவர்களை கிழி, கிழியென கிழித்துள்ளார்.

அவர் கூறுகையில், ”அனுஷ்கா ஷர்மாவை, நீண்டகாலமாக விடாமல் கேலி செய்பவர்களை பார்த்து வெட்கப்படுகிறேன்.

கொஞ்சமாவது இரக்க குணத்தை கொண்டிருங்கள். அவருக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்.

அனுஷ்கா சர்மா எப்போதுமே எனக்கு நேர்மறையான எண்ணங்களை தான் தந்துள்ளார்.

இதே போன்று உங்கள் சகோதரி அல்லது மனைவி அல்லது காதலியை ஒருவர் கேலி செய்தால் எப்படி இருக்கும் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer