Tuesday, March 29, 2016

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 50 ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று, அவரது குடும்பத்தார் தொடர்ந்து வலியுறுத்தி
வந்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்க அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டது. இதையடுத்து நேதாஜியின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 100க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் தலா 10 ஆவணங்களை அளித்துள்ள நிலையில், மீதம் 30 ஆவணங்களை சேர்த்து மொத்தம் 50 ரகசிய ஆவணங்களை இன்று அமைச்சர் மகேஷ் ஷர்மா இணையத் தளம் மூலம் வெளியிட உள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer