Tuesday, March 29, 2016

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் தேர்தல் ஆணையம் சார்பில் சோதனை நடத்த வேண்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழக அமைச்சரகள் நத்தம் விசுவநாதன், ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மற்றும் இவர்களது ஆதரவாளர்கள் இல்லத்தில் அதிமுக உளவுத் துறை சார்பில் சோதனை செய்யப்பட்டது என்றும், அப்போது கட்டுக் கட்டாக லஞ்ச பணம் சிக்கியது என்றும் வாட்சாப்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வைகோ மேடைகளில்
பேசி வந்தார்.

இந்நிலையில், இன்று மதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மனுவை அனுப்பி வைத்துள்ளார் வைகோ. அதில் லஞ்சமாகப் பெற்ற 500 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய பணக்கட்டுகள், 1000 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய பணக்கட்டுகள் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவின் நிலவறையில் பதுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த பணக்கட்டுகள் மூடி வைத்தபடி 10 கண்டெயினர் லாரிகளில் சிறுதாவூர் பங்களாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்றும் வைகோ குறிப்பிட்டு உள்ளார். இந்த லாரிகளில் நிலக்கரியும், விறகுகளும் கொண்டு செல்லப்படுகின்றன என்று பொய்யான தகவல்கள் அப்பகுதி மக்களிடம் பரப்பப்பட்டு உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளார் வைகோ.

எனவே, தேர்தல் ஆணையம் பாரபட்சம் பார்க்காமல் இதை விசாரிக்க வேண்டும் என்றும் வைகோ தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer