Monday, March 28, 2016

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியுள்ளனர்.

ஆனால் எந்த கட்சிக்கு ஆதரவு என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெறும் இளையராஜாவுக்கு பாராட்டுகள் தெரிவித்த ரஜினி, சிறந்த தமிழ் திரைப்படமாக 'விசாரணை' படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer