Thursday, March 31, 2016

யாழில் தற்கொலை அங்கி... வைத்திருந்த நபர் கிளிநொச்சியில் மாட்டினார் இப்படி தான் இன்றைய தேதிக்கு செய்திகள் இணையத்தில் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இங்கே நாம் ஒரு விடையத்தை கவனிக்க மறந்துவிட்டோம். தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருக்க பாவிக்கப்பட்டுள்ள அனைத்து பேப்பரும்(நாளிதழ்) சிங்கள பேர்ப்பர்கள் தான். இதனை எவரும் கவனிக்க தவறிவிட்டார்கள். அத்தோடு சில சிம் கார்டுகளை கண்டு பிடித்துள்ளதகா சிங்களப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவை அனைத்துமே, சிங்கள கடைகளின், பிளாஸ்டிக் பாக் தான். இவை எவ்வாறு யாழில் இருந்தது  என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

யாழில் தற்கொலை அங்கிகளையும், சிம் கார்டுகளையும் சிங்கள புலனாய்வு துறையினரே வைத்து விட்டு. அதனை தாம் கண்டு பிடித்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒரு நபரை தாம் கைதுசெய்துள்ளோம் என்றும் நாடகமாடியுள்ளார்கள். இதனூடாக புலிகள் அச்சுறுத்தல் இன்னும் உள்ளதாகவும். இல்லையென்றால் தாக்குதல் ஒன்று நடக்க உள்ள அச்சம் காணப்படுவதாகவும் வெளி உலகிற்கு காட்டிக்கொள்ளவே இதுபோன்ற வேலைகள் இடம்பெற்று வருகிறது.

நன்றாக திட்டமிட்டு இதனைச் செய்துள்ள மைத்திரி அரசு, சின்னப் பிழை ஒன்றைச் செய்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளது. அது தான் இந்த சிங்களப் பேப்பர் விடையம். இதனை எத்தனை தமிழ் ஊடகங்கள் புரிந்துகொண்டு சரியாத தகவலை வெளியிடும்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer