Thursday, March 31, 2016

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, பிரசாரத்திற்காக தயார் செய்யப்பட்ட வேனில் ஆய்வுப்பணி மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரசாரத்திற்காக தயார் செய்யப்பட்டுள்ள வேனில் பல்வேறு வசதிகள் உள்ளன.

வை-பை’, ஹோம் தியேட்டர், எல்.இ.டி. டி.வி. சாய்தள மெத்தை, டைனிங் டேபிள் உள்பட ‘குளுகுளு’ சொகுசு வசதிகளுடன் 7 பேர் அமரக் கூடியதாக உள்ளது.

தயார் செய்யப்பட்டுள்ள அந்த வேன், தனக்கு மிகவும் வசதியாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்வதற்காக,த கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பாலவாக்கம் வரை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கருணாநிதியுடன் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் இருந்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer