Thursday, March 31, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே இங்கிலாந்தின் கிளப் அணியான சோமர்செட்டில் விளையாட முடிவு செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயவர்த்தனே பிற நாடுகளில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல், பிக் பாஷ், நாட்வெஸ்ட் தொடரில் விளையாடிய ஜெயவர்த்தனே தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ரோஜர்ஸ் (அவுஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார் ஜெயவர்த்தனே.

0 comments :

Post a Comment

 
Toggle Footer