Thursday, March 31, 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துக்களில் 253 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்களில் ஒட்டுமொத்தமாக 253 பேர் இறந்துள்ளதாகவும், இது 2014ம் ஆண்டை ஒப்பிடுகையில் 10 பேர் கூடுதலாக இறந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த சாலை விபத்துக்களில் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களே அதிகமாக பலியாகியுள்ளனர்.

குறிப்பாக, கடந்தாண்டு மட்டும் 66 பேர் மோட்டார் சைக்களில் விபத்துக்களிலும் 58 பாதசாரிகள் மீது வாகனங்னகள் மோதியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மின்சார சைக்கிள்களில் பயணம் செய்து விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், கடந்த 4 ஆண்டுகளில் நிகழ்ந்த சாலை விபத்து இறப்புகளை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையில் சுமார் 16 சதவிகிதம் குறைந்துள்ளது.

அதேசமயம், விபத்துக்களில் பலியானவர்களில் 75 சதவிகிதத்தினர் 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆவர்.

மேலும், சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தவிர்த்து காயம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,830 ஆக பதிவாகியுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer