Monday, February 29, 2016

திமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு தேமுதிக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசியதாவது, கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் கூட்டணி குறித்து பேசி விட்டேன்.

எல்லோரும் திமுக கூட்டணிக்கு தான் போக வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லியுள்ளனர்.

அதனால், இரண்டு மாதத்துக்கு முன்னரே திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகிவிட்டது, திமுக சார்பில், சிமெண்ட் தொழிற்சாலை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் என்னை வந்து சந்தித்தபோது, திமுக கூட்டணியில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என கேட்டார்.

எங்களுக்கு, 90 சீட் வேண்டும் என்றும் அமைச்சரவையில் பங்கும் வேண்டும் எனவும் கூறினோம், ஆனால், வாய்ப்பே இல்லை. 50 சீட்டுகள் கொடுக்க திமுக தயாராக உள்ளது. அமைச்சரவையில் பங்கு என்பதெல்லாம், ஒரு போதும் நடக்காது என கூறிவிட்டார்.

அடுத்தகட்டமாக சிலர் வந்து பேசினர், உள்ளாட்சி தேர்தலிலும், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி இருக்கும் என்றும் இரண்டு கட்சிகளும் சரிசமமாக சீட்டுகளை பிரித்துக் கொள்ளலாம் என்று கூறி ஒப்பந்தம் போடலாம் என்று கூறினோம்.

ஆனால், அதனையும் ஏற்க மறுத்துவிட்டனர், அப்படியிருக்கையில் எதனை நம்பி அவர்களோடு கூட்டணி அமைப்பது?

எனவே, இந்த நிலைப்பாடு குறித்து நமது கீழ்மட்ட தொண்டர்களிடம் தெரியப்படுத்துங்கள் என்று மாவட்ட செயலர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer