Monday, February 29, 2016

பாலிவுட் கவர்ச்சி நடிகை ’சன்னி லியோன்’ பாக்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை அணியை வாங்கியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல், திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்கள் வரிசையில், சின்னத்திரை நடிகர்களின் பிசிஎல் (BCL) எனப்படும் பாக்ஸ் கிரிக்கெட் லீக் (Box Cricket League) போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், "எனக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். நான் சிறுவயதில் கால்பந்து தான் அதிகமாக விளையாடி இருக்கிறேன்.

எனக்கு கிரிக்கெட்டை பற்றி அதிகமாக தெரியாது. ஆனால் எனது தந்தையிடம் இருந்து கொஞ்சம் கற்றுக் கொண்டேன். தற்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறப்பானதாக அமைந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் ’விசில் போடு’ வார்த்தையை பயன்படுத்தி தன்னுடைய அணியை பிரபலப்படுத்தவிருக்கிறாராம் சன்னி லியோன். இதற்காக பல்வேறு விளம்பரப் படங்களிலும் அவர் தோன்றவுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer