Thursday, February 25, 2016

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக மட்டும் இல்லாமல் சகலதுறை வீரராகவும் ஜொலித்து வருபவர் ரவிசந்திர அஸ்வின்.

தமிழக வீரரான அஸ்வின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகைப் போட்டிகளிலும் கலக்கி வருகிறார்.

32 டெஸ்ட் போட்டியில் 176 விக்கெட்டுகளும், 102 ஒருநாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளும், 35 டி20 போட்டியில் 43 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

தற்போது வங்கதேசத்தில் நடக்கும் ஆசியக்கிண்ண டி20 தொடரில் விளையாடி வருகிறார். தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ணத்தில் அசத்த உள்ளார்.

அஸ்வின் இந்த நிலைக்கு வர மிகவும் ஊக்கம் அளித்தவர் அவரது மனைவி ப்ரீத்தி நாராயணன்.

அஸ்வின் தனது பள்ளிப் பருவ தோழியான ப்ரீத்தி நாராயணனை காதலித்து கடந்த 2011ம் ஆண்டு மணந்து கொண்டார்.

சென்னை சேர்ந்த இருவரும் அங்கு Padma Sheshadri Bala Bhavan என்ற ஒரு பள்ளியில் தான் படித்தார்கள். அப்போதே இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். இந்த புரிதலே நாளடைவில் காதலாக மாறியது.

தவிர, இருவரின் குடும்பமும் நல்ல பழக்கம் உடையவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கும் பச்சை கொடியும் காட்டி விட்டனர்.

கல்லூரி காலங்களில் இருவரும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

ப்ரீத்தி, ஆரம்ப காலத்தில் அஸ்வினின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு நல்ல ஊக்கம் கொடுத்துள்ளார்.

இதனாலே அஸ்வினால் அடுத்தடுத்த நிலைகளை எளிதில் கடக்க முடிந்தது. அஸ்வின் ஆடும் போட்டிகளையும் அவ்வப்போது மைதானத்திற்கே வந்து பார்பார் ப்ரீத்தி.

இவர்கள் கல்லூரியை முடித்த உடனே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வீட்டு பெரியோர்கள் முடிவு செய்தனர். அதன் படியே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அஸ்வின் கடந்த 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை ஏந்தி அழகுப் பார்த்துக் கொண்டிருந்த அதே ஆண்டு யூலை மாதம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ’அகிரா’ என பெயரிட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer