Friday, January 29, 2016

எஸ்விஎஸ் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு அன்புமணி ராமதாஸ் அனுமதி வழங்கினார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் முறைகேடாக இயங்கி வந்த எஸ்விஎஸ் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தற்போது சீல் வைத்துள்ளார். அங்கு 3 மாணவிகள் தற்கொலை என்கிற சம்பவத்தை அடுத்து கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த கல்லூரி அனுமதி இன்றி முறைகேடாக இயங்கி வந்தது தெரிய வந்துள்ள நிலையில், இக்கல்லூரிக்கு அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ்தான் அனுமதி வழங்கினார் என்று விஜகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாமக செய்தித் தொடர்பாளர், அன்புமணி ராமதாஸ் அனுமதி வழங்கவில்லை என்றும், மாநில அரசுதான் அனுமதி வழங்கியது என்றும் தெரிவித்துள்ளார். அதோடு இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் முறைகேடாக அனுமதி வழங்கினார் என்கிற வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணையில் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராகி உள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer