Thursday, January 28, 2016

தன்னை பற்றி தரக்குறைவாக பேசியதாக நடிகை ரோஜா மீது தெலுங்கு தேசம் கட்சியின் பெண் எம்.எல்.ஏ வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் அனிதா. தலித் வகுப்பை சேர்ந்த இவரின் ஜாதி குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நடிகை ரோஜா விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரூ.1 கோடி கேட்டு ரோஜா மீது அவர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, எனது ஜாதி குறித்தும் எனக்கும் எனது கணவருக்கு உள்ள தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் நடிகை ரோஜா விமர்சித்துள்ளார்.

தீவிரவாதியை விட ஆபத்தானவர் ரோஜா. அவரது இந்த பேச்சு எனக்கும் எனது குடும்பத்தாருக்கு மன வேதனையை தருகிறது.

எனவே என்னையும் எனது குடும்பத்தையும் இழிவாக பேசிய ரோஜா மீது நீதிமன்றத்தில் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இதில் இருந்து எக்காரணத்தையும் கொண்டும் நான் பின் வாங்க மாட்டேன் என்று அனிதா கூறியுள்ளார்.

இந்நிலையில் அனிதா தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்

 இது குறித்து அவர் கூறியதாவது, என்மீது ரூ.1 கோடி கேட்டு அனிதா எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கந்து வட்டி வியாபாரத்தில் பாதிக்கப்படும் தலித் பெண்களுக்காக போராட அனிதாவுக்கு எண்ணம் இல்லை.

ஆனால் அது தொடர்பாக கேள்வி கேட்ட என் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.

என்னை ஒழிக்க சந்திரபாபு நாயுடு அனிதா எம்.எல்.ஏ.வை பகடைக்காயாக பயன்படுத்துகிறார். ஒரு பெண் என்ற வகையில் அனிதாவுக்காக வருத்தப் படுகிறேன்.

அவரது நோட்டீசு எனக்கு கிடைக்க வில்லை. அது கிடைத்ததும் என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer