Sunday, January 31, 2016

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் கரீபியன் லீக் டி20 போட்டியிலும் கலக்கவுள்ளார்.

சங்கக்காரா கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவரது ஆட்டத்திறன் மெருகேறிக் கொண்டே தான் செல்கிறது.

சச்சின்- வார்னே நடத்திய ஆல் ஸ்டார்ஸ் டி20 தொடரில் பங்கேற்ற சங்கக்காரா பட்டையை கிளப்பினார். இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் டி20 தொடரிலும் பங்கேற்றார்.

மேலும், தற்போது ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை காட்டி வருகிறார்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் கரீபியன் லீக் டி20 போட்டியில் விளையாடவுள்ளார். 6 முக்கிய வீரர்களில் சங்ககக்காராவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

டுபிளசி, குப்தில், மெக்கல்லம், ஷேன் வாட்சன் ஆகியோரும் முக்கிய வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பெயர் இன்னும் தெரிவு செய்யவில்லை.

6 வாரங்கள் நடக்கும் இந்த தொடர் யூன் இறுதியில் தொடங்கும் என்றும், இதற்கான வரைவு பட்டியல் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தொடரின் தலைமை நிர்வாக அதிகாரி டேமியன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer