Friday, January 29, 2016

சென்னை ‘தி ஆஷ்ரம்’ பள்ளி விவகாரத்தில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் பள்ளி முதல்வர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிண்டியில் உள்ள ‘தி ஆஷ்ரம்’ மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியின் இடம் தனக்கு சொந்தமானது என்று வெங்கடேஸ்வரலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய பரிகாரம் தேட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இணை இயக்குநர், இது தொடர்பாக 27.01.16 அன்று நடக்கும் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்க மளிக்க ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலர் லதா ரஜினிகாந்த், அதன் நிர்வாக அறங்காவலரான நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பள்ளி முதல்வருக்கு கடந்த 12ம் திகதி அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், அந்த அழைப்பாணையை எதிர்த்து ஆஷ்ரம் பள்ளி முதல்வர் வந்தனா டக்னாய்ட் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி சட்டவிதிகளின்படி, இந்த அழைப்பாணையை அனுப்ப இணை இயக்குநருக்கு அதிகாரமில்லை.

எனவே அந்த அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டுமென அவர் சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி, இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை.

ஆனால் அந்த அழைப்பாணையையே ரத்து செய்ய வேண்டும் என கோர முடியாது.

வேண்டுமென்றால் விசாரணை திகதியை தள்ளி வைக்கிறோம். அன்றைய தினம் பள்ளி நிர்வாகம் சார்பில் லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மற்றும் பள்ளி முதல்வர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என வாதிட்டுள்ளார்.

இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், அழைப்பாணையை ரத்து செய்ய முடியாது.

எனவே லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மற்றும் பள்ளி முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பாக 2 வாரத்துக்குள் ஆஜராகி இந்த பிரச்சினை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இணை இயக்குநர் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer