Thursday, January 28, 2016

தெலுங்கனாவில் வீட்டில் கழிவறை இல்லாததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நலகொண்டா மாவட்டம் குண்டலா கிராமத்தை சேர்ந்த ரேகா என்ற 17 வயது மாணவி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

ரேகா 10ம் வகுப்பை முடித்து இன்டர்மீடியேட் சேர்ந்த பின்னர், கடந்த 7 மாதங்களாக பெற்றோரிடம் வீட்டில் கழிவறை கட்டித் தருமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் வறுமை காரணமாக அவரது பெற்றோர்களால் கழிவறை கட்டித் தர முடியவில்லை.

இந்நிலையில் கடந்த திங்களன்று, வீட்டில் கழிவறை இல்லாத வேதனையில், ரேகா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து அவரது தாய் லல்லம்மா கூறுகையில், எனது மகள் கல்லூரிக்கு சென்ற பின், கழிவறை வேண்டும் கழிவறை வேண்டுமென்றே கூறிக் கொண்டிருந்தாள்.

சங்கராந்தி விடுமுறைக்கு பின், படிக்க போகவும் மறுத்த அவள், தொலைக்காட்சியில் வரும் கழிவறை தொடர்பான விளம்பரங்களை எங்களிடம் காட்டுவாள்.

ஆனால் எங்கள் வீட்டில் கழிவறை கட்ட நிலமும் இல்லை, பணமும் இல்லை.

இப்போது இதனால் எங்கள் அருமை மகளை இழந்து நிற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதத்தில் எழுதியுள்ள ரேகா, அப்பா எனக்கு வெட்கமாக இருக்கிறது.. நான் ஒரு கல்லூரி மாணவி, எனது உணர்வுகளை புரிந்து கொள்ளுங்களேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தெலுங்கானாவில் உள்ள 48 சதவீத கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் கழிவறை வசதி கிடையாது என்பது ஓர் அதிர்ச்சி தகவல்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer