Friday, November 27, 2015

இளையராஜாவும் வைரமுத்துவும் பல வருடங்களாக இணைந்து பணியாற்றவில்லை என்றே எண்ணம் சினிமா ரசிகர்களிடையே இருந்து வந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையிலும் வைரமுத்து பாடல்கள் எழுதாமல் இருந்து வந்தார்.

சமீபமாக சீனு ராமசாமி இயக்கிய “இடம் பொருள் ஏவல்” படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வைரமுத்து முதல்முறையாக பாடல்கள் எழுதினார். இந்த படத்தினுடைய பாடல்கள் வெளியாகியும் படம் இன்னும் வெளியாகமல் தான் உள்ளது.

இந்நிலையில் சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து ’தர்மதுரை’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டாவது முறையாக பாடல்கள் எழுதகிறார் வைரமுத்து.

வெளியாகாத படத்தின் இசைக் கூட்டணி இரண்டாவது முறையும் உடையாமல் ஒன்றிணைவது ஆரோக்கியமானதாகவே உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer