Saturday, November 28, 2015

கடந்த சில வாரமாக நடிகர் கார்த்திக் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்குக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அவரது உடல்நலம் குறித்த செய்திகள் எதுவும் கசியவில்லை. அதன்பின் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தனக்கு செய்யப்பட்டு இருந்த மூட்டுவலி அறுவை சிகிச்சை குறித்து பரிசோதனை செய்வதற்காக, நேற்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் கார்த்திக்.

இதனிடையே, மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன இதனயடுத்து கார்த்திக் தரப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை மறுத்துள்ளதோடு, அவர் நலமாக இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதே போல் கார்த்திக்கின் மகனும், நடிகருமான கௌதம் கார்த்திக், தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பா நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் , என் அப்பா குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. அவர் சாதாரண செக்கப்பிற்காகவே மருத்துவமனைக்குச் சென்றார். இதய நோயெல்லாம் அல்ல. வதந்திகளை தயவுசெய்து நிறுத்தவும். அவர் நலமாக இருக்கிறார் என அந்த ட்வீட்டில் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer