Monday, November 30, 2015

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இதுகுறித்து தெரிவித்ததாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விஜயத்தின்போது, போர்க்குற்றம் தொடர்பில் இலங்கையில் உருவாக்கப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்வார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மோல்டாவில் நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின்போது, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு உதவியளிக்கும் வகையில் பிரித்தானியா 980 கோடி ரூபா நிதியை வழங்க இணக்கம் தெரிவித்திருந்தது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer