Monday, November 30, 2015

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. சென்னையில் நடந்து முடிந்த முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது.

மலேசியா படப்பிடிப்பைத் தொடர்ந்து, விரைவில் கோவாவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது, அப்போது அந்த பாடலை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

2 நிமிடங்கள் அடங்கிய அந்த பதிவு வாட்ஸ்-அப் மூலமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer