Monday, November 30, 2015

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி மோதல் விவகாரத்தை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா விசாரித்து வருகிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பிரச்சனையை காவல் நிலையம் சென்று புகார் செய்திருக்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரான நடிகை நக்மா விஜயதாரணியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பொறுப்பாளராகவும் உள்ள நக்மா, விஜயதாரணி எம்.எல்.ஏ. தன் தரப்பு புகாரை டெல்லி மேலிடத்திடம்தான் தெரிவித்து இருக்க வேண்டும்.

மேலும், காவல் நிலையத்துக்கு சென்று மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை புகார் கொடுக்க வைத்தது தவறான செயல் என்றும் இது ஏற்கத்தக்கதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer