Monday, November 30, 2015

ரஜினிமுருகன் திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதியன்று ரிலீஸாகிறது. சில பிரச்சனைகளை சந்தித்ததால், எப்போதோ ரிலீஸாகவேண்டிய இந்த திரைப்படம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. எல்லா பிரச்சனைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்ட ரஜினி முருகன் திரைப்படம் குறித்து, கதாநாயகன் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

"ரஜினி முருகன்" என்ற பெயர், அனைத்து தரப்பு மக்களை சென்றடைவதற்குகான முக்கியமான காரணமாகும். இந்த பெயரை வைக்க வேண்டும் என முடிவெடுத்த போது மனதில் சிறிய அச்சம் ஏற்பட்டது. சிறு வயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன். அதே நேரத்தில் அவருடைய பெயரை அவரது அனுமதியுடன் எனது படத்திற்க்கு வைப்பது என்பது பெருமைக்குரியது.

நான் பல சுவரொட்டிகளில் பார்த்திருக்கிறேன், ரஜினி சார் ரசிகர்கள் அவர்களது பெயருக்கு முன்னால் ரஜினி சார் பெயரை சேர்ப்பது வழக்கம். அதனால் எதுவும் பிரச்சனை வருமோ என்ற அச்சம் இருந்தது ஆனால் தற்போது அவர்களின் பெரும் அதரவுடம் படம் வெளிவரப்போகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் ரஜினி சாரை பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்பதால் தான் எனக்கும் குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவரை ஒருமுறை பேட்டி எடுக்கும் போது கூறினார் ’ஒருனாள் நீ கதாநாயகனாக வருவ, அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன்’ என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விகரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன். ரஜினி முருகன் திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer