Friday, November 27, 2015

போன வாரம் கடுமையான மழைநாள் அது. மொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதப்பதற்கான பிள்ளையார் சுழியும் அன்றுதான் போடப்பட்டது.

அதற்கு முதல் நாள் இரவு ஆர்யா ஒரு ட்விட்டை தட்டிவிட்டார். “நாலைக்கு காலையில் மூன்றரை மணிக்கு என்னோட சேர்ந்து சைக்கிள் ஓட்ட யாரெல்லாம் வர்றீங்க? ஈசிஆர் ரோட்டில் ஐ ஆம் வெயிட்டிங்”. இதுதான் அந்த ட்விட். “யோவ்... உலகமே மழையில கெடக்கு. வெளியில் என்ன நடக்குதுன்னே தெரியாம ரூம்ல உட்கார்ந்துகிட்டு ட்விட் போட்றீயா?” என்று மனசுக்குள் திட்டி தீர்த்தார்கள் பலர்.

சரி, ரிசல்ட் என்னாச்சு? மூன்றரை மணிக்கு ஆர்யாவும் அவரோட சைக்கிளும் காத்திருக்க, ஒருவர் வரணுமே? ம்ஹும்... அதுக்காக அஞ்சுறவரா அவர்? மஹாபலிபுரம் வரைக்கும் ஒண்டியா ஓட்டி, ஒண்டிப்புலியா திரும்பி வந்திருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer