Friday, November 27, 2015

மணிரத்னத்தின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த் - த்ரிஷா இணைந்து ‘ஓ குட்-பை நண்பா’ என்ற பாடலுக்கு கடற்கரையில் செம ஆட்டம் போட்டனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் அரண்மனை 2 திரைப்படத்திலும் அதேமாதிரியான கடற்கரை காட்சியில் நடித்துக்கொண்டிருக்க ‘12 வருடங்களுக்கு முன்பு த்ரிஷாவுடன் இதே மாதிரி கடற்கரை காட்சியில் நடித்தேன். நேரம் பறந்துசெல்கிறது’ என ட்வீட் செய்திருக்கிறார்.

சித்தார்த்தின் இந்த நெகிழ்ச்சியான ட்வீட் தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு முன்பாக ‘ நாம் சரி என நினைத்துக்கொண்டிருக்கும் விஷயம் தவறு என உணரும் தருணம் தான் உண்மையிலேயே சிறந்த தருணம்’ என சித்தார்த் வீசிய ட்வீட்டிர்கு ‘எச ட்வீட்’ ஒன்றை சமந்தா வீசியது தான் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. ’நான் தெரிந்துமட்டுமே வைத்துக்கொள்ள வேண்டிய யாரோ ஒருவன் என உணர்ந்த தருணம் தான் சிறந்தது’ என சமந்தா பதிவு செய்த ட்வீட்டை நீக்கிவிட்டாலும் சிலர் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்ரெண்ட் ஆக்கிவிட்டனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer