Friday, November 27, 2015

ப்ரியா ஆனந்த்... ப்ரியா ஆனந்த் என்றொரு செல்லம் இருந்தாரே, என்னவானார்? அவருக்கும் படமில்லை.

அவருடைய செல்லம் கவுதம் கார்த்திக்குக்கும் படம் இல்லை. ஆனால் இருவரையும் எல்லா இடங்களிலும் சேர்ந்தே பார்க்க முடிவதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். போகிற போக்கை பார்த்தால், கவுதமின் கண்ட்ரோல் மொத்தமும் ப்ரியா வசம் வந்து சேரும் என்கிறார்கள். இதுபற்றி அக்கறையோடு விசாரிக்கும் மூத்த பிரஸ்காரர்களிடம், “என் மகன் என்னை மாதிரிதானே இருப்பான்” என்று சந்தோஷப்படுகிறார் கார்த்திக்.

ஏன் கவுதமுக்கு படம் இல்லை என்று விசாரித்தால், டம்ளரும் டபராவும் சேர்ந்தே இருக்கணும்னா எப்படி? என்கிறது சினிமாவுலகம். யெஸ்... என்னோட சேர்த்து ப்ரியா ஆனந்துக்கும் வாய்ப்பு கொடுங்க என்கிறாராம். அதனாலேயே தெறித்து ஓடுகிறது தயாரிப்பாளர் வட்டாரம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer