Sunday, November 29, 2015

சவுதியில் வேலைக்கு சென்று கையை இழந்த கஸ்தூரி அங்கு தான் அனுபவித்த துன்பங்கள் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை காட்பாடியை சேர்ந்த கஸ்தூரி குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேப்பியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவித்தது மட்டுமில்லாமல் தனது கையையும் பறிகொடுத்த அவர் சில வாரங்களுக்கு முன் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் சவுதியில் தான் அனுபவித்த துன்பங்கள் குறித்து அவர் கூறியதாவது,

எனது கணவர் வேலைக்கு செல்வதில்லை. மேலும் எனது மகனுக்கு காலில் அடிபட்டதால் அவனாலும் வேலைக்கு செல்லமுடியவில்லை.

இந்நிலையில் தெரிந்த ஒருவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறியதையடுத்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சவூதிக்கு சென்றேன்.

ஆனால் அங்கு சென்ற பின் எனக்கு காலையில் எழுந்திருப்பதில் இருந்து இரவு தூங்கும்போது வரை வேலை இருந்தது.

ஒருநிமிடம் கூட ஓய்வு கிடைக்காது. மேலும் நல்ல உணவு வழங்காமல் மூணு நாளுக்கு முன்னாடி செஞ்ச உணவைதான் வழங்கினர்.

இது குறித்து எனது மகனிடம் செல்போனில் தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் சொந்தக்கார பெண் எனது சம்பளம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பிடுங்கி வைத்துகொண்டார்.

மேலும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானேன். இதையடுத்து அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது ஜன்னல் அருகே இருந்த ஜெனரேட்டர்ல கை சிக்கிக்கிடுச்சு. ரத்தம் வெளியேறினதால் நான் மயங்கி கீழ விழுந்துட்டேன்.

கண் விழித்தபோது, சிதைந்துபோயிருந்ததால் கையை வெட்டிவிட்டதாக கூறினர். குடும்ப வறுமைக்கு ஒரே தீர்வாக வெளிநாட்டு வேலை அமையும்னு நம்பிதான் அங்கு போனேன்.

இந்த மாதிரி கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்னு தெரியாது. இனி அப்படி யாரும் போகக்கூடாது. அதுக்கு நானே நேரடி உதாரணம் என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer