Sunday, November 29, 2015

தமிழகத்தில் வெள்ளசேதங்களை பார்வையிட வந்த மத்திய குழு அம்மா உணவகத்தில் உணவருந்தியுள்ளனர்.

மத்திய அரசின் உள்துறை இணைசெயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 பேர் கொண்ட குழு கடந்த 26ம் திகதி சென்னை வந்தனர்.

அந்த குழுவினர் காஞ்சீபுரம், கடலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு இறுதி நாளான நேற்று வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவிலுள்ள முகாமுக்கு சென்று விசாரித்த மத்திய குழுவினர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றையும் ஆய்வு செய்துள்ளனர்.

அந்த முகாம் அருகில் இருந்த அம்மா உணவகத்தில் இருந்துதான் 3 வேளையும் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே அம்மா உணவகத்துக்கு சென்ற மத்திய குழுவினர் அங்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து அங்கிருந்த அதிகாரிகளிடம் உணவு நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer