Friday, November 27, 2015

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘தூங்காவனம்’. தன் அடுத்தப்படத்திற்கு தயாராகவிட்டார் கமல். இப்படத்தை மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்குகிறார். இவர் 1989-ல் கமல் நடித்த மலையாள படமான ‘சாணக்யன்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை 50 நாட்களில் முடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். இந்த படம்  நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் தன் அடுத்த ‘கெட்-அப்’கான வேலைகளில் இருக்கிறார் கமல்.

1980-களில் ரஜினி, கமல் என கொடிகட்டிப் பறந்த அமலா இப்படத்தின் மூலம் மீண்டும் கமலுக்கு ஜோடியாகிறார். சத்யா படத்தில் கமலுடன் அமலா நடித்த ரொமான்ஸ் காட்சிகளை யாராலும் மறக்க முடியாது. 27 வருடங்களுக்கு பிறகு “அம்மா அப்பா விளையாட்டு” படத்தின் மூலமாக கமலுடன் இணைகிறார் அமலா.

இந்த படத்தினுடை வேலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளது. இதனால் 40 நாட்கள் அமெரிக்காவில் படபிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. இப்படம் தமிழ்-மலையாளம் என இருமொழிகளில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த படத்திற்கு விஸ்வரூபம், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்களுக்கு இசையமைத்த ‘ஜிப்ரான்’ இசையமைக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer