Friday, November 27, 2015

ஹாலிவுட் பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழ் திரைப்படமான கர்மா. R.அர்விந்த் எழுதி இயக்கிய திரைப்படம் “கர்மா”. மிகவும் வித்தியாசமான திரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் ஹாலிவுட்டில் நடைபெறும் “ஹாலிவுட் ஸ்கை திரைப்பட விழா”வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விழா குழுவினர் அதிகாரப்பபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படம் சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற “All Lights India International Film Festival” –ல் முதன் முறையாக திரையிடப்பட்டது குறிப்படத்தக்கது. இப்படத்தில் “கவிப்பேரரசு” வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். இசை L.V.கணேசன், ஒளிப்பதிவு V.B.சிவானந்தம் மற்றும் படத்தொகுப்பு வினோத்பாலன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer