Monday, November 30, 2015

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை இராணுவத்தளபதி லெப் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவையும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேண ஹெட்டியாராச்சியையும் சீற்றமடையச் செய்துள்ளதாகவம் இருவருக்கும் தெரிவிக்காமல் ஜனாதிபதி இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததே அதற்கு காரணம் எனவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. எனினும் இந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஜனாதிபதியை நீர்கொழும்பில் விடுதி; ஒன்றில் சந்தித்த ஓன்பது மூத்த இராணுஅதிகாரிகளும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதியுத்தத்தில் முக்கியபங்காற்றியவர்கள். இவர்களில் சிலர் ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளனர், ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின்போது இவர்கள் இ;றுதியுத்தத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளனர் என அந்த செய்தி கூறுகிறது. இலங்கை அரசாங்கம் யுத்த குற்றவிசாரணைகளிற்காக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை ஏற்படுத்தஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இணங்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த சிலர், அமைச்சர்கள் சிலரின் உதவியுன் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இதன் பின்னர் இராணுவதளபதி ஜனாதிபதியை சந்தித்து இந்த சந்திப்பு குறித்து உரையாடியுள்ளார், குறிப்பிட்ட அதிகாரிகள் தன்னுடைய அனுமதியின்றி இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இராணுவஉயர் அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சை சேர்ந்தவர்களையோ அல்லது அதனுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளையோ சந்திக்கும்முன்னர் தனது அனுமதியை பெறவேண்டும் என கூறியுள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து வெளியாகியுள்ள மறைமுக அழுத்தங்கள் காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது என்று , இச்செய்தியை ஒரு தரப்பு திரிவு படுத்தியும் கூறிவருகிறது. இருப்பினும் புலிகளோடு இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட ராணுவ தளபதிகளை எதற்காக மைத்திரி சந்தித்தார் என்பது தற்போது புரியாத புதிராக உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer