Sunday, November 29, 2015

சிங்கப்பூர் பிரதமர் சிங்கப்பூரில் உள்ள சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார்.

சிங்கப்பூரில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை சீக்கியர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு, நேற்று சிறப்பு விருந்தளித்துள்ளார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய லீ சியென், சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கு, சீக்கியர்கள் உறுதுணையாக உள்ளனர். அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீக்கிய சமூகத்திய மத நல்லிணக்கத்தையும் பன்முகத்துவ கலாச்சாரத்தையும் ஊக்குவித்து வருகின்றனர்.

சீக்கிய சமுதாயத்தினருக்கு சிங்கப்பூரில் அரசு எல்லா வகையிலும் தொடர்ந்து ஆதரவு தரும் என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர் அரசு உருது, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளை இரண்டாவது மொழியாக ஆக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer