Sunday, November 29, 2015

படத்தின் போஸ்டரை பார்த்தீர்களா? அதிலிருக்கும் ஸ்பார்க் தான் படத்திலும் இருக்கும். அதனால் தான் தெறி என டைட்டில் வைத்திருக்கிறோம்’ என்று பேட்டியளித்திருக்கிறார் விஜய்யின் 59-வது படத்தை இயக்கியிருக்கும் அட்லி. பிரபல இணையதள பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் ’விஜய் உணர்வுப்பூவமான ஒரு போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். விஜய்யை பார்க்கும் போது யாரோ ஒரு போலிஸாக தெரியாது. நமது குடும்பத்தில் ஒருவராக உணரும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது” என பேசியிருக்கிறார்.

வயதில் சின்னவராக இருந்தாலும் திறமையில் அட்லி பெரியவர் என ராஜா ராணி படத்திலேயே பாராட்டைப் பெற்ற அட்லியிடம் விஷயத்தை வாங்கமுடியுமா? போஸ்டரில் மூன்று விஜய் இருக்கிறார்களே! விஜய் மூன்று ரோலில் நடிக்கிறாரா? என்ற கேள்விக்கு, ‘எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் படம் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும். அதற்கான சர்ப்ரைஸ் படத்தில் வைத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டார்.

மேலும் ஏமி ஜாக்சனையும், சமந்தாவையும் கிளாமருக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் கருவியாக பயன்படுத்தியிருக்கிறாராம். தெறி திரைப்படத்தின் ட்ரெய்லரை ரஜினி பிறந்தநாளன்று ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்துவருவதாக ஒரு தகவலும், ஏப்ரல் 14-ஆம் தேதி(தமிழ்ப்புத்தாண்டு) ரஜினி படத்துடன் போட்டியிட்டு தெறி படம் ரிலீஸாவதாக ஒரு தகவலும் கோடம்பாக்கத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு முத்து படத்துடன் சந்திரலேகாவையும், சந்திரமுகியுடன் சச்சின் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்தபோது ஏற்பட்ட முடிவுகள் விஜய்க்கு திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை என்கின்றனர் திரையுலகை அறிந்தவர்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer