Friday, November 27, 2015

"குண்டுப்பெண் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதையே" என இந்தப்படத்தின் எல்லா ப்ரோமோசனிலும் சத்தியம் பண்ணி சொன்னார்கள், முக்கியமா 'தி மோஸ்ட் பிட்டஸ்ட்' ஹீரோயின் கம் யோகா டீச்சரான அனுஷ்கா 25 கிலோ எடையை கூட்டி நடிக்கிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது. சரி படம் எப்படி! பத்து வயசில அப்பாவை இழந்த 'பப்ளி' பொண்ணு அனுஷ்கா.

அம்மா,தம்பி, தாத்தான்னு மிடில்கிளாஸ் வாழ்க்கை. கல்யாண வயசாகியும் ஒரு மாப்பிளையும் செட் ஆகலை. வர்ற மாப்பிள்ளை எல்லாம் அனுஷ்கா சைஸாலே, 'தெறிக்க"விடுறாங்க. ஒரு கட்டத்தில கல்யாணத்து மேலேயே வெறுப்பா இருக்கிற சமயம் ஆர்யா மாப்ளையா வர்றாரு. டாகுமெண்ட் ப்லிம் டைரக்டராகணுங்கிற லட்சியத்தில இருக்கிற ஆர்யாவும்,கல்யாண வெறுப்பில இருக்கும் அனுஷ்காவும் தனியே பேசி திருமணத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.

அதன் பிறகும் இருவரும் நண்பர்களாகத் தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆர்யா மீது அனுஷ்காவிற்கு காதல் வரும் போது கல்யாணம் நிச்சயமாகி விடுகிறது. ஆர்யாவின் லண்டன் தோழியும் அவருக்கு ப்ரோப்போஸ் செய்ய சேர்ந்தார்களா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ் இது ஒரு கதை. இன்னோரு கதை, பிரகாஷ்ராஜ் வைத்திருக்கும் உடனடி எடைக்குறைப்பு நிறுவனத்தில் அனுஷ்கா உடல் எடையைக் குறைக்கப் பணம் கட்டி சேர்கிறார். அங்கு ஏற்கனவே அழகிப்போட்டியில் பங்கேற்பதற்காக எடை குறைக்கப் பயிற்சி எடுக்கும் அனுஷ்காவின் தோழிக்கு கிட்னி ஃபெயிலியர் ஆக, அனுஷ்கா தட்டிக்கேட்கிறார்.

அவருக்கு நீதி கிடைத்ததா, அந்தப் போலி நிறுவனம் என்னவாயிற்று? என்பது கிளைமாக்ஸ்க்கு முந்திய க்ளைமாக்ஸ். அனுஷ்கா,ஆர்யா, பெர்ப்பாமென்ஸ் பின்னியெடுக்கும் ஊர்வசி என எல்லோரையும் வைத்துக்கொண்டும் உருட்டு உருட்டென உருட்டியிருக்கிறார் இயக்குநர். பன்மொழிப் படங்களில் கையாளப்படும் சாதாரண விதிகள் கூட மீறப்படுவதால் தெலுங்கு டப்பிங் படம் பார்க்கும் ஃபீல் வந்துவிடுகிறது.

உடல் பருமன் என்பது அவமான விஷயமில்லை, அதற்காக தவறான வழிகளில் உங்கள் உடல்நலத்தை அடகு வைக்க வேண்டாம் என்பது ஒரு ஒன்லைன். 'நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை விரும்பும் நபர் தேடி வருவார்" இது இன்னொரு ஒன்லைன். இந்த ரெண்டுக்கும் நடுவில் நாம் கொஞ்சம் அலைக்கழிந்துதான் போய்விடுகிறோம். உத்தமபுத்திரன் படத்தில் 'குட்டிப்புலி'யாக வந்த குண்டுப்பையன் பரத் இதில் ஸ்லிம்மான அனுஷ்கா தம்பியாக வந்து 'அட' சொல்ல வைக்கிறார்.

"அடியே நான் உத்தமவில்லி" மாதிரியான டயலாக்கில் அங்கங்கே ஊர்வசி ரிலாக்ஸாக வைக்கிறார். சில ஷாட்களில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா நானும் இருக்கிறேன்னு சொல்கிறார். ஒரே ஆறுதல் அனுஷ்கா மட்டுமே குண்டானாலும் அழகு போகாது எனப் புரிய வைத்திருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer