Monday, November 30, 2015

சவுதி அரேபியாவில் 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய நபர் ஒருவரை விடுதலை செய்ய சுவிஸ் அரசு விடுத்திருந்த கோரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவில் கடந்த 2012ம் ஆண்டு இஸ்லாமிய மதத்தை அவதூறாக பேசிய குற்றத்திற்காக ரைஃப் பதாவி என்ற நபருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் சாட்டை அடி தண்டனையும் வழங்கப்பட்டது.

சவுதி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன.

கனடாவில் வசித்து வரும் ரைஃப் பதாவியின் மனைவியான Ensaf Haidar என்பவர் ‘தனது கணவரை மீட்டு தருமாறு’ சுவிஸ் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்ற சுவிஸ் அரசு உடனடியாக செயலில் இறங்கி சவுதி மன்னரான சல்மானிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ‘மனித உரிமைகளுக்கு எதிராக சித்ரவதைகளுக்கு உள்ளாகியுள்ள பதாவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த மாதம் Sakharov என்ற மனித உரிமைக்கான விருதினை பதாவிக்கு அளித்து கெளரவித்ததுடன் அவரை விடுதலை செய்யவும் சவுதி அரசை வலியுறுத்தியது.

சுவிஸ் அரசின் தீவிரமான நடவடிக்கைகள் குறித்து சில தினங்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய பதாவியின் மனைவி, ‘சுவிஸ் அரசின் மீது தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், அவர்கள் நிச்சயம் தனது கணவரை மீட்டு தருவார்கள்’ என கண்ணீருடன் பேசியுள்ளார்.

இந்நிலையில், சுவிஸ் வெளியுறுவு அமைச்சகத்தின் செயலாளரான Yves Rossier கடந்த சனிக்கிழமை பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், சுவிஸ் அரசு விடுத்த கோரிக்கையை தற்போது சவுதி மன்னர் ஏற்றுள்ளதாகவும், விரைவில் பதாவிக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer