Sunday, November 29, 2015

இந்திய அணித்தலைவர் டோனி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு அறிவிக்கலாம் என்று முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி வீரராக வலம் வந்த ஷேவாக் அண்மையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ரஞ்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடந்தால் அதில் வர்ணனையாளராக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், நாக்பூர் ஆடுகளம் தொடர்பாக பேசிய ஷேவாக், "சொந்த மண்ணில் களமிறங்கும் அணிகளுக்கு ஏற்றவாறு ஆடுகளம் அமைக்கப்படுவதில் தவறில்லை" என்றார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகளில் தொடரை இழந்த நிலையில், டோனியின் அணித்தலைவர் பதவி தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இது பற்றி பேசிய ஷேவாக், "டோனிக்கு தற்போது 34 வயது ஆகிறது. இன்னும் சில வருடங்கள் மட்டுமே அவர் கிரிக்கெட்டில் இருப்பார். அதுவரை அவர் தொடர்ந்து சிறந்த பங்களிப்பு அளிக்க வேண்டும்.

தோல்விகள் தொடர்ந்து வந்தாலும் அவர் துவண்டு விட மாட்டார்.

ஒருநாள் போட்டிகளில் துடுப்பெடுத்தாடும் திறமை தனக்கு எப்போது குறைந்து விட்டது என நினைக்கிறாரோ அப்போது அவர் ஓய்வு பெற்றுவிடுவார்.

இதை தான் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் செய்தார்” என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer